நாமக்கல் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்
(M) 9894973545
நாமக்கல் மாவட்ட செய்திகள்!
...
வரலாறு
மலையின் மீது அமைந்துள்ள பாலடைந்த கோவிலின் வடமேற்கு மற்றும் தெற்கு சுவறுகளில் அமைந்துள்ள
கல்வெட்டுகளில் நாமக்கல் பகுதி ‘திருவரைக்கல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெறும்பாலான பகுதிகளுக்கு
அனுப்பப்படும் முட்டைகள் நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதாலும், நாமக்கல் ‘ கோழிகள் நகரம்’ என்றும்,
‘முட்டை நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டையானது இந்நகரத்தின் சிறப்பம்சமாகும்.
இக்கோட்டையானது சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்மேற்கு திசையில்
அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையை சென்றடைய முடியும்.
ஒருகாலத்தில் நாமக்கல் பகுதியானது பல்லவ வம்சத்தில் மணம்புரிந்திருந்த அட்டிக்குல மன்னன் குணசீலா
என்பவரின் ஆட்சியில் இருந்துள்ளது. பின்னர் 9ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் மீது படையெடுத்து வென்ற
சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்து, பின்னர் விஜயநகர பேரரசின் ஆளுகையின் கீழமைந்த மதுரா பதில்
ஆளுநர் அலுவலின்கீழ் இருந்து வந்துள்ளது. அதன் பின்னர், ஹைதர் அலியின் படைத்தலைவர்களில் ஒருவரால்
ஆதிக்கம் செலுத்தப்பட்டு, 1768 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் மலைப்பிரதேசமானவும், தெற்கு பகுதிகள் சமவெளிகளாகவும்
காணப்படுகின்றன. இம்மாவட்டத்தின் பிரதான அருவிகளாக காவிரியாறு, ஐய்யாறு, கரிப்பொட்டான் ஆறு
மற்றும் திருமணிமுத்தாறு ஆகியவை திகழ்கின்றன. இவற்றில் காவிரி ஆறானது தெற்கு- தென்மேற்கு திசைகளில்,
மாவட்டத்தின் எல்லையை அறவனைத்தவாறு செல்கிறது.
நாமக்கல் மாவட்டத்தின் தோட்டம் எனப்படுவது கொல்லிமலை . இது ‘நாடு’ என்று அழைக்கப்படும்
16 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியுள்ள ஊராட்சி ஒன்றியத்தின் முலம் நிர்வகிக்கப்படுகிறது.
கொல்லிமலை 371.03 சதுர க.மீ. பரப்பளவில், கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள பழங்குடியினர் ‘மலையாளிகள்’ ஆவர். இப்பகுதி கடையேழு வல்லல்களில் ஒருவரான வல்வில் ஓரி
எனும் குறுநில மன்னரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற அரப்பலீசுவரர் கோவில்
இந்து மதத்தின் ஆதிக்கத்தின் முன்பு ஜெய்ன மத துறவிகளின் உறைவிடமாகத் திகழ்ந்துள்ளது.
இக்கோவிலின் அருகில் ‘ஆகாய கங்கை’ என்னும் பிரபலமான அருவி அமைந்துள்ளது.
மாவட்டம் பற்றி
நாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து 01.01.1997 முதல் தனி மாவட்டமாக உதயமானது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், இராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், பரமத்தி வேலூர்,
திருச்செங்கோடு, குமாரபாளையம் , மோகனூர் என எட்டு வட்டங்கள் உள்ளன.
எல்லைகள்
நாமக்கல் மாவட்டம் வடக்கு திசையில் சேலம் மாவட்டதினாலும், தெற்கு திசையில் கரூர் மாவட்டத்தினாலும்,
கிழக்கு திசையில் திருச்சி மற்றம் சேலம் மாவட்டங்களினாலும், மேற்கு திசையில் ஈரோடு மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது.
அமைவிடம் மற்றும் பரப்பு
நாமக்கல் மாவட்டத்தின் புவியியல் ரீதியிலான பரப்பளவு 3368.21 சதுர கி.மீ. ஆகும். இம்மாவட்டம் 11 .00′
மற்றும் 11 .360′ வடக்கு அட்சரேகைகளுக்கும், 77 .28′ மற்றும் 78 .300′ கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையே அமைந்துள்ளது.
நிர்வாகம்
நாமக்கல் மாவட்டமானது நிர்வாக பணிகளுக்காக இரண்டு வருவாய் கோட்டங்களாகவும், 8 வட்டங்களாகவும்,
31 குறுவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஊரக நிர்வாகத்திற்காக இம்மாவட்டம் 5 நகராட்சிகளாகவும்,
15 ஊராட்சி ஒன்றியங்களாகவும், 19 நகர பஞ்சாயத்துகளாகவும், 322 கிராம பஞசாயத்துக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகை 17,26,601 ஆகும்.
இதில் 8,69,280 ஆண்களும், 8,57,321 பெண்களும் அடங்குவர்.